Thursday, February 1, 2007

சனவரி-2007

http://rozavasanth.blogspot.com/

ரோசா :)

கடந்த சில மாதங்களாய் தொடர்ந்து தமிழ்மணம் பக்கம் வராததால் இப்போதுதான் இந்த இடுகையைப் படித்தேன். உங்களுக்கு விருப்பமான பணியில் ஈடுபடவிருக்கும் உங்கட்கு என் வாழ்த்துக்கள்.

'ரோசா' இல்லாத வலையுலகம் 'இடிப்பாரை இல்லாத' தாகிவிடும் என்று அஞ்சுகிறேன்!

விரைவில் மீண்டும் வருக! :)

*********************************************************************

http://mrnatarajan.blogspot.com/2007/01/blog-post_29.html#comment-4535036053863034762

இதே ம.வே. சிவகுமார் (தான் என்று நினைக்கிறேன்) 1990-களின் துவக்கத்தில் கமல்ஹாசனைக் கொண்டு ஒரு நாவலை வெளியிட்டார். அந்த நாவல் 'காஞ்சி மட அதிபதி'யை கிண்டல் செய்து எழுதியதாகக் கருதப்பட்டதால் - அதற்காக ஜெயேந்திரர் - இந்த சிவகுமாரை மிரட்ட - இப்போதைய கிழக்கு பதிப்ப்க பா.ரா(கவன்)-ஐ அனுப்பி மிரட்டினார் - என்கிற செய்தி நக்கீரனில் நவம்பர் 2004 ஆம் ஆண்டு (ஜெயேந்திரர் கைது சம்பவத்துக்குப் பிறகு) வெளிவந்தது.

இப்போது இவருக்காக பரிதாபப்பட்டு பதிவெழுதும் சிவகுமார்கள் ?! - அது பற்றியெல்லாம் பேச மாட்டார்கள்!

DD-யில் யார் 'செல்வாக்கு' அதிகம் என்பது அனைவருக்கும் தெரியும்! 2000 ஆம் ஆண்டில் மத்திய அரசு பா.ஜ.க- விடம் தான் இருந்தது; அப்போதும் "யார்" DD -யில் செல்வாக்காக இருந்திருப்பார்கள் என்று ஊகிப்பது கடினமல்ல! ;)

இப்போது தேவையே இல்லாமல் கலைஞரை இந்தப் பிரச்சனையில் இழுத்து இவ்ர் எழுதியிருப்பதால் பிகேஎஸ்-களுக்கு - பழைய விவகாரங்கள் யாருக்கும் தெரியாது என்ற நினைப்பில் பதிவு போட துணிவு வருகிறது!
---------------------------------------------------------------------------------------------
ரவி,

உங்கள் கருத்து முழுக்க நியாயமானது.

சனாதன ஜல்லியடிக்கும் கூட்டத்துக்கு Ahura Mazda வோ allathu Yima வோ நல்ல புத்தி அருள்வார்களாக! ;))


பி.கு.:

உங்கள் சாயிபாபா பதிவில் நான் போட்ட பின்னூட்டம் இன்னும் வரவில்லையே?
-------------------------------------------------------------------------------------------
http://poar-parai.blogspot.com/2007/01/blog-post_16.html#comment-1036148764691028275

The anony is a well known blogger, who "proclaims" he is "politically incorrect!!" in his blog.

You have wonderfully 'deconstructed' both sujatha's story and anony's hidden agenda!

One of the finest pieces i've read in a long time. vAzthukkaL! :)

-------------------------------------------------------------------------------------------
http://madippakkam.blogspot.com/2006/10/blog-post_09.html#c2151041291206790574

லக்கி!!!!!!

சிரிச்சி சிரிச்சி உக்காந்த எடத்திலருந்து விழுந்துட்டேன்யா!

போன 2006 ஆம் ஆண்டின் சிறந்த உள்குத்து பதிவாக இதுவே இருக்கும்!

Caucasian cousins ரொம்ப நல்லவனுங்க! எவ்ளோ செருப்படி குடுத்தாலும் திருந்தமாட்டானுங்க! ;)))
-------------------------------------------------------------------------------------
இன்னொரு மெக்காலே பதிவில் சொன்னதுதான் இப்போதும் சொல்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். நிறைய எழுதுங்கள்.

மிக மிகக் குறைவானவர்களால் மட்டுமே இதுவரை தொடப்பட்டிருக்கும் அழுத்தம் உங்கள் எழுத்தில் உள்ளது.

அப்புறம், உங்கள் எழுத்தின் 'ஓட்டம்' தான் முக்கியம்; நீளம், அகலம் எல்லாத்தையும் எழுத்தின் ஓட்டம் தீர்மானிக்க வேண்டு்மேயல்லாது - செருப்புக்குக் காலை வெட்டக்கூடாது.

இவ்விஷயத்தில் சில நண்பர்களின் கருத்தோடு என்னால் ஒத்துப் போகமுடியவில்லை. :)

----------------------------------------------------------------
அருமையான ஆழமான, அவதானித்து எழுதப்பட்ட பதிவு :)

>> தன் சமூக அடையாளங்கள் குறித்து வெட்கம் கொண்டு அவற்றை மறைத்து ஆதிக்கச் சாதியினரின் அடையாளங்களை விரும்பி அணியும் ஒருவர் தன்னுடைய சாதி இழிவானது என்றும் ஆதிக்க சாதி உயர்வானது என்றும் தன் மனதின் ஆழத்தில் ஏற்றுக்கொள்கிறார். தன் சுற்றம் மற்றும் பிள்ளைகளின் மனதிலும் இந்த எண்ணத்தை ஏற்றுகிறார். (தர்க்கத்தின் மூலம் உருவாக்கப்படாத இத்தகைய எண்ணங்களை பின்னாளில் தர்க்கத்தின் மூலம் மாற்றுவது மிகவும் கடினம்.) சாதி அமைப்பு எவ்வித சீர்திருத்தமும் இன்றித் தொடரவேண்டும் என்று விரும்புவோரின் அதிகப்பட்ச எதிர்பார்ப்பு இதுதான். >>

சரியான பார்வை - ஒழுங்கற்றவைகளாகத் தோன்றும் சில்லுகளின் மொத்தவடிவத்தினை கோர்த்து வைத்துக் காட்டித் திகைக்க வைக்கிற திறன் உங்களுக்கு வாய்த்திருக்கிறது.

தங்கமணி, சுந்தரமூர்த்தி, சுந்தரவடிவேல், 'உருப்படாதது' நாராயண், ரோ்சாவசந்த், தருமி போன்றவர்களின் வரிசையில் வைத்துப் பார்க்கும்படியான பதிவு இது! :)

தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே! :)

---------------------------------------------------

சிநேகிதன்,

>> அனால் இந்த திட்டம் , உலகவங்கியிடம் கடன் வாங்கி பின் அவர்கள் சொல்லுவதற்கெல்லாம் கட்டுப்படுவது போல ஆகாமல் இருந்தால் சரி. >>

முக்கியமான கவனத்தில் இருத்த வேண்டிய விடயம். கலைஞருக்கு கண்டிப்பாக அந்தக் கவனம் இருக்கும் என்பது தெரிந்த விடயம்தான்.

மற்றபடி இதைச் சாக்காக வைத்து தமிழ்நாட்டில் 'நாயக்கர்' அரசியலை முன்னிறுத்த மனதுக்குள் கள்ளத்தனமாக "அடடா! நல்ல வாய்ப்பு இது! ஒக சாங்கு(Song) வேஸ்கோ ரா" என்று மனப்பால் குடிப்பவர்கள் ஏமாந்துதான் போவார்கள். :)

----------------------------------------------------------------------
பத்ரி,

உங்களுக்கு என் வேண்டுகோள் ஒன்றை என் வலைப்பதிவில் - இங்கே
தந்திருக்கிறேன்.

நன்றி.

நியோ.

----------------------------------------------------------------------

ஆருயிர் நண்பரே! உடன்பிறப்பே! சிங்கக்குட்டியே! தங்கக்கட்டியே! ஜோ!! - இந்தப்பதிவெழுதிய உங்கள் கைகளுக்கு என் ஆயிரம் முத்தங்கள்!

"பழைய பகை" படையெடுத்தால் 'கத்தி' 'புத்தி' இரண்டும் கொண்டு வென்று விடுவார்கள் எமது திராவிட உடன்பிறப்புகள் என்று "பரம்பரைப் பகைவர்கள்" நன்றாகத் தெரிந்து கொள்ளட்டும்! :)

----------------------------------------------------------------------

பொன்ஸ் உங்களுக்கு என் மனம் நிறந்த பாராட்டுக்கள். நீங்கள் எழுதியதால்தான் இந்த அருவெறுப்பான ஆபாசக் காலட்சேபக் கூத்துக்களுக்கு சரியான குட்டு விழுந்திருக்கிறது!

இதுகள் எழுதுவது போல பெண்களை இதைவிடவும் படுகேவலமாக இழிவுபடுத்திவிட முடியாது யாரும்.

"பொம்மனாட்டி வேலைக்குப் போனா கெட்டுடுவா" என்று திருவாய் மலர்ந்து அருளி - ஒரு 'காஞ்சி' போன பாப்பாரப் பொறம்போக்கு மடவெட்டி சாமியார் சொன்னபோதும் அந்த மடத்துக்குப் போய்க்கொண்டுதான் இருந்திருப்பார்கள் இந்த 'நல்லவர்கள்!'

இதே 'நல்லவர்கள்' குஷ்பூ விவகாரத்தைப் பயன்படுத்தி - பெண்ணியத்துக்காகவல்ல - தமிழ் அடையாளத்தின் மீது 'விசம் தோய்ந்த அம்பு' விட கிடைத்த வாய்ப்பாகக் கருதி - 'கருத்துச் சுதந்திர' முக(ம்)மூடி-மரத்துக்குப் பின்னாலிருந்து அம்பு விட்டார்கள்!!

இதே 'நல்லவர்கள்' இப்போது பெண்களைப் படுகேவலமாகச் சித்தரித்து - போகப்பொருளாக மட்டுமே பார்த்து இழிவு செய்யவும் துணிந்து விட்டார்கள்.

இவர்களே 'அன்னை சாரதா', 'அன்னை நிவேதா', 'அரவிந்த அன்னை' பற்றியெல்லாம் விளக்கி புத்தகம் போடவும் செய்வார்கள்!!

முதலிலே 'தீட்டு'ப் பாட்டு பாடினார்கள் - இவர்களே ஒரு தீட்டினால்தான் இந்த உலகிற்கு வந்தவர்கள் என்று தெரிந்தும் கூட; இப்போது "Moral puritanist pundits" போல நீட்டி முழக்குகிறார்கள். (அப்புறம் வக்கணையாக "Moral Policing"-ஐ எதிர்த்து நீட்டி முழக்க வந்துதித்தவர்கள் போல வேசம் காட்டுவார்கள்!)

எனக்கு இவர்க்ள் உண்மையிலேயே 'வர்ண சோமபான மயக்கத்தில்' இருந்து வெளிவர விரும்புபவர் அல்லர் என்பது தெரிந்துதான் இருக்கிறது.

என் ஆதங்கம் எல்லாம் வலையுலகில் பெண்கள் - இவ்விஷயத்தில் தேவையான அளவு வெளிப்படையாக கண்டிக்கவில்லை என்று தோன்றுகிறது.

அப்புறம் "^&%^&%^%&* சப்பாத்தி" விளையாட்டு விளையாட ஆரம்பித்தால் குறை சொல்ல முடியாது போய்விடும்!.

----------------------------------------------------------------------

No comments: